pure mind is worth than thousand million dollars

Monday, January 16, 2017


My photography - 09
taken on 12.04.2015/ 12.38 a,m @, World's end,
Nuwara eliya.


பற்றுக் காடாய் கருகிப் போன வாழ்க்கைக்கு பசுமை சேர்க்க வந்த பணித்துளி,
கதிரவன் கண்டு தடமுமின்றி தலைமறைவானது தவிக்கவிட்டு...

பணித்துளியின் ஈரம் நம்பி பசுமைக் கனவு கண்டு பசுமையிருப்பினும், உயிர் பிடிக்க உறைந்திருந்த சொட்டுப் பச்சையும் கருக்கிவிட்டே சென்றதுவே கொடுமை...

சோர்ந்து போன வாழ்வெந்தன்,
அதிலே விழிப்பும், வனப்பும், வளமும், வசிகரமும் சேர்பதாய் ஆனந்தம் கொண்டேன்;
உங்கள் வரவிலே, உங்கள் உறவிலே....

பட்ட புண்ணிலே படும் என்பார்;
வெந்த புண் என் மனததிலே வேல் பாய்ச்சிச் சென்றீரே..
மருந்து வேண்டாம், உங்கள் ஆருதல் வேண்டாம் சென்றிருக்கலாம்..
காய்ந்த காயம் அதிலே வெந்நீரும் ஊற்றியே சென்றீரே...!


My photography - 08
taken on 18.09.2016/ 6.23 a,m @, Akkaraipattu beach, 
Akkaraipattu.


கடலும் வானமும் ஒன்றாய் சேரும் போது 
கண்கொள்ளாக் காட்சி பிறக்கிறது...

உணர்வுகளும் உறவுகளும் ஒன்றாய் இணையும் போது
நினைவுகளும் ஞாபகங்களும் படமாகிறது...

கடல் போல் உறவுகளே! உங்களைப் பார்த்து
கண்கள் அழுத்துக் கொள்வதில்லை...

வானம் போல் உணர்வுகளே
உங்களை சொல்லிமுடிக்க எல்லையில்லை...

ஆனாலும் நீங்கள் இணைவது கனவாகி
தனிமைக்கு கடற்கரை இடமாகிறது...!





My photography - 07
taken on 26.12.2014 @, Seethawaka botanical gardens, 
Awissawella.


சருகுகளாய் துயரங்களும் துன்பங்களும்
மலர்களாய் சாதனைகளும் சந்தோசங்களும்

மரங்களாய் செறிந்துவிட்ட உறவுகள்
ஓடும் நதிகளாய் சின்னச் சின்ன ஞாபகங்கள்

புற்தரைகளாய் விரிந்த பரந்த நம்பிக்கைகள்
வீசும் தென்றலாய் கொஞ்சம் ஒய்வு

வானமளவு கனவுகள்..!
எண்ணமிருந்தால் வாழ்வும் நந்தவனம்..!